தினசரி கொரோனா பாதிப்பு 444 ஆக குறைந்தது: சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிப்பு
கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
புதுடெல்லி,
இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது. 113 நாட்களுக்கு பிறகு நேற்று முன்தினம் 500-ஐ தாண்டியது. இந்தநிலையில், நேற்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில், 444 பேருக்கு தொற்று உறுதியானது. இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 46 லட்சத்து 90 ஆயிரத்து 936 ஆக உயர்ந்தது.
தொற்றில் இருந்து 24 மணி நேரத்தில் 252 பேர் குணமடைந்தனர். இதுவரை மொத்தம் 4 கோடியே 41 லட்சத்து 56 ஆயிரத்து 345 பேர் நோயில் இருந்து மீண்டுள்ளனர்.
கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்று அதில் 191 அதிகரித்தது. மொத்தம் 3 ஆயிரத்து 809 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
நேற்று முன்தினம் கொரோனா உயிரிழப்பு எதுவும் இல்லை. கடந்த 24 மணி நேரத்தில் தமிழ்நாட்டில் ஒருவர் பலியானார். அதனால் மொத்த பலி எண்ணிக்கை 5 லட்சத்து 30 ஆயிரத்து 782 ஆக உயர்ந்தது.