தென்மேற்கு அரபிக்கடலில் அடுத்த 12 மணி நேரத்தில் புயல் வலுப்பெறக் கூடும் - வானிலை மையம் தகவல்

தென்மேற்கு அரபிக்கடலில் அடுத்த 12 மணி நேரத்தில் புயல் வலுப்பெறக் கூடும் என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.;

Update: 2023-10-20 16:02 GMT

புதுடெல்லி,

நாடு முழுவதும் தென்மேற்கு பருவமழை நேற்றுடன் விலகியது. தமிழகத்தில் வரும் 22-ம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், அரபிக்கடல் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்தில் புயல் உருவாக வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் தென்மேற்கு அரபிக்கடலில் அடுத்த 12 மணி நேரத்தில் புயல் வலுப்பெறக் கூடும் என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. அரபிக்கடலில் உருவாகும் புயல் மேற்கு இந்திய கடலோர பகுதிகளை நோக்கி நகரக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்