குஜராத்தை அச்சுறுத்தும் 'அஸ்னா' புயல் இந்தியக் கடற்பகுதியிலிருந்து விலகிச் செல்ல வாய்ப்பு
அரபிக்கடல் பகுதியில் நீடித்து வந்த காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக வலுப்பெற்று இருக்கிறது.;
குஜராத்,
கட்ச் மற்றும் அதை ஒட்டியுள்ள பாகிஸ்தான் மற்றும் வடகிழக்கு அரபிக்கடல் பகுதியில் நீடித்து வந்த காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக வலுப்பெற்று இருக்கிறது. இந்த புயலுக்கு 'அஸ்னா' என பாகிஸ்தான் பெயரிட்டு இருக்கிறது.
இது மணிக்கு 6 கி.மீ. வேகத்தில் மேற்கு நோக்கி நகர்ந்து வருவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. தற்போதைய நிலவரப்படி இது குஜராத்தின் நலியாவுக்கு மேற்கே 250 கிமீ, தென்-தெற்கு மேற்கே 160 கிமீ தொலைவில் நகர்ந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இது வடகிழக்கு அரபிக்கடலில் மேற்கு-வடமேற்காக நகர்ந்து அடுத்த 24 மணி நேரத்தில் இந்திய கடற்பகுதியை விட்டு கடந்து சென்றுவிடும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. அரபிக்கடலின் தற்போதைய சூழலை பொறுத்தவரை இந்த புயல் மேலும் வலுப்பெற வாய்ப்பு இல்லை என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.