பணப்பரிவர்த்தனை செயலிகளில் ஐ.வி.ஆர். அழைப்புகள் மூலம் சைபர் கிரைம் கும்பல் மோசடி - போலீசார் எச்சரிக்கை

கணிணி மயமான ஐ.வி.ஆர். அழைப்பு வந்தால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2023-09-17 22:45 GMT

புதுடெல்லி,

பணப்பரிவர்த்தனை செயலிகள் மூலம் வாடிக்கையாளர் சேவை மையங்களை தொடர்பு கொள்ளும் போது, ஏற்கனவே கணிணியில் பதிவு செய்யப்பட்ட குரல் மூலம் பதிலளிக்கும் ஐ.வி.ஆர். அழைப்பு பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த ஐ.வி.ஆர். அழைப்பை பயன்படுத்தி, பணப்பரிவர்த்தனை செயலிகளின் வாலெட்டுகளில் உள்ள பணத்தை சைபர் கிரைம் கும்பல் கொள்ளையடித்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஐ.வி.ஆர். அழைப்பில் பேசும் போது குறுஞ்செய்தி மூலம் வரும் ஓ.டி.பி. எண்ணை பதிவு செய்த பின்னர் உடனடியாக அழைப்பு துண்டிக்கப்படுகிறது. அதனைத் தொடர்ந்து பணப்பரிவர்த்தனை செயலிகளின் வாலெட்டுகளில் இருந்து சிறிது சிறிதாக பணம் கொள்ளையடிக்கப்படுவதாக புகார்கள் வந்துள்ளன.

இது தொடர்பாக கடந்த மாதத்தில் 10-க்கும் மேற்பட்டோர் புகார் அளித்துள்ளதாகவும், எனவே கணிணி மயமான ஐ.வி.ஆர். அழைப்பு வந்தால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் எனவும் சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.


Full View


Tags:    

மேலும் செய்திகள்