உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியா வெற்றிபெற மணல் சிற்பம் வரைந்து வாழ்த்திய சுதா்சன் பட்நாயக்

பிரபல மணல் சிற்ப கலைஞரான சுதர்சன் பட்நாயக், 56 அடி நீளமுள்ள உலகக்கோப்பை மணல் சிற்பத்தை உருவாக்கியுள்ளார்.

Update: 2023-11-18 03:38 GMT

பூரி (ஒடிசா),

உலகக்கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திரமோடி மைதானத்தில் நாளை மதியம் 2 மணிக்கு தொடங்குகிறது. இந்த போட்டியில் இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன. உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியா வெற்றி பெற பலரும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், பிரபல மணல் சிற்ப கலைஞரான சுதா்சன் பட்நாயக், ஒடிசா மாநிலம் பூரி கடற்கரையில் மணல் சிற்பம் வரைந்து உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணி வெற்றிபெற வாழ்த்து தொிவித்துள்ளாா்.

இதற்காக சுதர்சன், தன்னுடைய மாணவர்களுடன் சேர்ந்து சுமார் 500 ஸ்டீல் கிண்ணங்கள் மற்றும் 300 கிரிக்கெட் பந்துகளைப் பயன்படுத்தி 56 அடி நீளமுள்ள உலகக்கோப்பை சிற்பத்தை உருவாக்கியுள்ளார். இந்த மணல் சிற்பத்தை செய்து முடிக்க அவர்களுக்கு சுமார் 6 மணி நேரமாகியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்