'நாட்டின் தற்போதைய அரசியல் சூழல் பா.ஜ.க.வுக்கு சாதகமாக இல்லை' - சரத் பவார்

வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் மக்களை பா.ஜ.க. ஏமாற்றியது என சரத் பவார் விமர்சித்துள்ளார்.

Update: 2024-01-04 16:51 GMT

மும்பை,

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் நிறுவனர் சரத் பவார், இன்று மராட்டிய மாநிலம் சீரடியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-

"கடந்த 2014-ம் ஆண்டு ஆட்சிக்கு வந்த பா.ஜ.க., பல திட்டங்களை அறிவித்து, பல வாக்குறுதிகளை அளித்தது. ஆனால், அவற்றை நிறைவேற்றாமல் மக்களை ஏமாற்றியது. தற்போது மக்கள் இதனை உணரத் தொடங்கி இருக்கிறார்கள். மக்களவை தேர்தல் நெருங்கும் நிலையில், நாட்டின் தற்போதைய அரசியல் சூழல் பா.ஜ.க.வுக்கு சாதகமாக இல்லை.

மொத்தமுள்ள 543 மக்களவை தொகுதிகளில் 400-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என பா.ஜ.க. கூறி வருகிறது. ஆனால், நாட்டின் பல மாநிலங்களில் பா.ஜ.க. ஆட்சியில் இல்லை என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்"

இவ்வாறு சரத் பவார் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்