அசாமில் கொடூரம்: தேயிலை தோட்டத்தில் கை, கால்களை கட்டி 2 நாட்களாக சிறுமி பலாத்காரம்

அசாமில் தேயிலை தோட்டத்தில் 14 வயது சிறுமியின் கை, கால்களை கட்டி 2 நாட்களாக பலாத்காரம் செய்த கொடூர சம்பவம் தெரிய வந்துள்ளது.;

Update: 2023-02-06 02:45 GMT



கவுகாத்தி,


அசாமின் திப்ரூகார் மாவட்டத்தில் லகோவால் நகரில் பெபேஜியா கிராமத்தில் 14 வயது சிறுமி கடந்த 3-ந்தேதி காணாமல் போயுள்ளார். இதுபற்றி சிறுமியின் தாயார் போலீசில் புகார் அளித்து உள்ளார்.

போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இதில், அத்தபாரி தேயிலை தோட்டத்திற்குள் சிறுமி கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில், சுய நினைவின்றி கிடந்து உள்ளார்.

அவரை மீட்டு சிகிச்சைக்காக கொண்டு சென்றுள்ளனர். சிறுமியின் தாயார், பைஜான் அலி என்பவர் மீது சந்தேகத்தின் பேரில் கடத்தல் புகார் கொடுத்து உள்ளார். இதுபற்றி பைஜான் அலியை பிடித்து விசாரித்ததில் திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன.

அந்நபர் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்த இந்த கொடூர செயலில் ஈடுபட்டது தெரிய வந்து உள்ளது. கூட்டாளிகள் 2 பேர் பைஜானுக்கு மதுபானம் வாங்கி கொடுத்து உள்ளனர்.

சிறுமியை பைஜான் கடத்தி சென்று, தேயிலை தோட்டத்தில் வைத்து, கை, கால்களை கட்டி போட்டு 2 நாட்களாக பலாத்காரத்தில் ஈடுபட்டு உள்ளார். பைஜான் கைது செய்யப்பட்டதுடன், கூட்டாளிகள் 4 பேரை விசாரணைக்கு அழைத்து சென்றுள்ளனர்.

சிறுமியை கயிற்றால் கட்டி போட்டு உள்ளனர். கும்பல் பலாத்காரம் என போலீசார் சந்தேகம் தெரிவித்து உள்ளனர். 376-வது பிரிவின் கீழ் வழக்கு பதிவாகி உள்ளது என திப்ரூகார் எஸ்.பி. ஸ்வேதங் மிஷ்ரா கூறியுள்ளார். இதுபற்றி தீவிர விசாரணை நடந்து வருகிறது என திப்ரூகார் கூடுதல் போலீஸ் சூப்பிரெண்டு பிதுல் சேத்தியா கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்