கச்சா எண்ணெய் விற்பனை - கட்டுப்பாடுகள் நீக்கம் - மத்திய அரசு

உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் கச்சா எண்ணெய் விற்பனைக்கான கட்டுப்பாடுகளை நீக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது.

Update: 2022-06-29 11:34 GMT

புதுடெல்லி,

இந்தியாவில் கச்சா எண்ணெய் விற்பனை கட்டுப்பாடுகள் இருந்த நிலையில் தற்போது அந்த கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் கச்சா எண்ணெய் விற்பனை கட்டுப்பாடுகளை நீக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

கச்சா எண்ணெய் நிறுவனங்களின் சந்தை படுத்துதல் சுதந்திரத்தை உறுதி செய்யும் வகையில் இந்த நடவடிக்கை இருக்கும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. கச்சா எண்ணெய் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதன் காரணமாக உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் கச்சா எண்ணெய்க்கு நல்ல விலை கிடைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்