புதிய மோடி அரசாங்கத்தின் 28 மந்திரிகள் மீது கிரிமினல் வழக்குகள்

புதிய மோடி அரசாங்கத்தின் 28 மந்திரிகள் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளதாக ஜனநாயக சீர்திருத்த சங்கம் (ஏ.டி.ஆர்.) தெரிவித்துள்ளது.

Update: 2024-06-11 12:44 GMT

புதுடெல்லி,

நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்றதை தொடர்ந்து இந்தியாவின் பிரதமராக 3-வது முறை நரேந்திர மோடி பதவியேற்றார். அவரது பதவியேற்பு விழா கடந்த 9-ந்தேதி நடைபெற்றது. அவருடன் சேர்ந்து 71 மந்திரிசபை உறுப்பினர்கள் பதவியேற்றுக் கொண்டனர்.

இந்நிலையில் புதிய மோடி அரசாங்கத்தின் 28 மந்திரிகள் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளதாக தேர்தல் உரிமைகள் அமைப்பான ஜனநாயக சீர்திருத்த சங்கம் (ஏ.டி.ஆர்.) தெரிவித்துள்ளது. இதில் 19 பேர் மீது கொலை முயற்சி, பெண்களுக்கு எதிரான குற்றங்கள், வெறுப்பு பேச்சு உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் கடுமையான குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி 8 மந்திரிகள் மீது வெறுப்பு பேச்சு தொடர்பான வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், 2 மந்திரிகள் மீது கொலை முயற்சி வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், 5 மந்திரிகள் மீது பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்