புனேயில் ஐ.பி.எல். கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்ட 9 பேர் கைது
புனேயில் ஐ.பி.எல். கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்ட 9 பேர் கைது செய்யப்பட்டனர்.
புனே,
மராட்டிய மாநிலம் புனே கோந்துவா பகுதியில் ஐ.பி.எல். கிரிக்கெட் சூதாட்டம் நடந்து வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில் போலீசார் அங்கு சென்று அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையில் மும்பை இந்தியன்ஸ்- சென்னை சூப்பர்கிங்ஸ் இடையே நடந்து வந்த ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான சூதாட்டத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதனை தொடர்ந்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 9 பேரை பிடித்து கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 18 செல்போன்கள், 3 மடிக்கணினிகள், ஒரு கம்ப்யூட்டர் மற்றும்ரூ.92 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து பிடிபட்ட9 பேரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.