திரிபுராவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு நிர்வாகி படுகொலை - அதிர்ச்சி சம்பவம்
திரிபுராவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு நிர்வாகி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.;
அகர்தலா,
திரிபுராவில் பஞ்சாயத்து தேர்தல் அடுத்த மாதம் 8ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் 10ம் தேதி எண்ணப்பட உள்ளது. இந்த பஞ்சாயத்து தேர்தலில் திரிபுராவின் தெற்கு பகுதியில் உள்ள ராஜ்நகரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு சார்பில் போட்டியிட அக்கட்சியின் நிர்வாகி படல் ஷில் வேட்புமனு தாக்கல் செய்திருந்தார்.
இந்நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு வேட்பாளர் படல் ஷில் நேற்று மாலை மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டுள்ளார். தகவலறிந்து விரைந்து வந்த போலீசார் படல் ஷிலின் உடலை கைப்பற்றி பிரேதபரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த கொலையில் ஈடுபட்ட நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.
அதேவேளை, கட்சி வேட்பாளர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து மாநிலம் தழுவிய அளவில் இன்று போராட்டம் நடத்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு அழைப்பு விடுத்துள்ளது.