பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவதை அதிகரிக்க வேண்டும்: மத்திய சுகாதாரத்துறை மந்திரி அறிவுறுத்தல்!

பள்ளி செல்லும் குழந்தைகள் கொரோனா தடுப்பூசி செலுத்துவதை மாநில அரசுகள் அதிகரிக்க வேண்டும் என்று சுகாதாரத்துறை மந்திரி அறிவுறுத்தினார்.;

Update: 2022-06-13 12:03 GMT

புதுடெல்லி,

கொரோனா பாதிப்பு சில மாநிலங்களில் வேகமாக பரவி வரும் நிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்த ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. மாநில சுகாதார அமைச்சர்களுடன் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில், காணொலி வாயிலாக மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சூக் மாண்டவியா பங்கேற்றார். அப்போது அவர் கூறியதாவது:-

"கொரோனா இன்னும் முடிவுக்கு வரவில்லை. சில மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், விழிப்புடன் இருப்பது முக்கியம் மற்றும் கொரோனா கால முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கையை மறந்துவிடக் கூடாது.

பள்ளி செல்லும் குழந்தைகள் கொரோனா தடுப்பூசி செலுத்துவதை மாநில அரசுகள் அதிகரிக்க வேண்டும். முதியோர்களுக்கு பூஸ்டர் டோஸ் செலுத்துவதையும் துரிதப்படுத்த வேண்டும்.

விரைவான கொரோனா பரிசோதனை மூலம் தொற்று மற்றவர்களுக்கு பரவாமல் தடுக்க உதவும். புது வகை மரபணு மாற்ற கொரோனா பரவுகிறதா என்பதை மாநிலங்கள் தீவிரமாக கண்காணிக்க வேண்டும்.

கொரோனா பரிசோதனை, பாதிக்கப்பட்டோருடன் தொடர்பிலிருந்தவர்களை கண்டறிதல், சிகிச்சை, தடுப்பூசி மற்றும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் ஆகிய 5 வழிமுறைகளையும் கட்டாயம் தொடர்ந்து கடைபிடிக்க வேண்டும்" என்று அறிவுறுத்தினார்.  

Tags:    

மேலும் செய்திகள்