கொரோனா பல நாடுகளிலும் அதிகரிக்கிறது..கவனமாக இருக்க வேண்டும்: பிரதமர் மோடி

கொரொனா பல்வேறு நாடுகளில் அதிகரிக்கத் தொடங்கியிருப்பதால் மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார்.

Update: 2022-12-25 09:33 GMT

புதுடெல்லி,

மாதம் தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் பிரதமர் மோடி வானொலி வாயிலாக நாட்டு மக்களுக்கு உரையாற்றுவது வழக்கம். அந்த வகையில் நடப்பு ஆண்டின் ஆண்டின் கடைசி மன்கி பாத் நிகழ்ச்சியில் உரையாற்றினார். அப்போது பிரதமர் மோடி கூறியதாவது:

உலக நாடுகளில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. கொரோனா பரவலைத் தடுக்க நாம் கவனமுடன் இருக்க வேண்டும்.அனைவரும் முக கவசம் அணிய வேண்டும். கைகளை சுத்தமாக கழுவ வேண்டும். கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விடுமுறைகளில் இருக்கும் மக்கள் கொரோனா விதிகளை பின்பற்ற வேண்டும். விடுமுறையை மகிழ்ச்சியாக கழிக்கும் நாட்கள் வைரசால் பாதிக்கப்படுவிடக்கூடாது என்பதை உறுதி செய்ய வேண்டும்" என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்