குருவாயூர் கோவிலில் 'நீதிமன்ற விளக்கு விழா' பெயரில் விழா நடைபெறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது - கேரள ஐகோர்ட்டு

மதச்சார்பற்ற ஜனநாயக நிறுவனங்கள், நீதிமன்றங்கள் எந்தவொரு மதத்தை ஊக்குவிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது.

Update: 2022-11-03 05:40 GMT

திருச்சூர்,

குருவாயூர் கோவிலில் ஆண்டுதோறும் நீதிமன்ற விளக்கு விழா நடைபெற்று வருகிறது. இந்நிலையில், குருவாயூர் கோவிலில் நடைபெறும் விழா, 'நீதிமன்ற விளக்கு விழா' என்ற பெயரில் நடைபெறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று கேரள ஐகோர்ட்டு ஆட்சேபனை தெரிவித்துள்ளது.

இது குறித்து, கேரள ஐகோர்ட்டு கடந்த 1ஆம் தேதி அதிகாரப்பூர்வ குறிப்பாணையை வெளியிட்டது. அதில் கூறப்பட்டுள்ளதாவது, அரசியலமைப்பின் கீழ் செயல்படும் மதச்சார்பற்ற ஜனநாயக நிறுவனங்கள், நீதிமன்றங்கள் ஆகியன எந்தவொரு குறிப்பிட்ட மதத்தை ஊக்குவிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது.

குருவாயூர் கோவிலில் விழா, 'நீதிமன்ற விளக்கு விழா' என்ற பெயரில் நடைபெறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. நீதிமன்ற விளக்கு விழா என்று குறிப்பிடுவதால், இந்த விழாவின் அமைப்புகளுடன் நீதிமன்றங்களுக்கும் ஏதோ ஒரு வகையில் தொடர்புள்ளது என்ற எண்ணத்தை ஏற்படுத்துகிறது.

நீதிமன்ற விளக்கு என்ற பெயரில் நடைபெறும் நிகழ்ச்சியில் திருச்சூர் மாவட்ட நீதித்துறை அதிகாரிகள் பங்கேற்க வேண்டாம். நீதித்துறை அதிகாரிகள் , வழக்கறிஞர் சங்க உறுப்பினர்கள், தனியாகவும் கூட்டாகவும் இவ்வாறான நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு எதிர்ப்பு இல்லை என்றாலும் மதத்தை போற்றும் நிகழ்ச்சியில் வழக்கறிஞர்கள் ஈடுபடுவது சரியில்லை என்று நீதிபதி ஜெயசங்கரன் நம்பியார் குறிப்பிடப்பட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்