மனைவி உள்பட 5 பேரை கொன்ற வழக்கில் தொழிலாளிக்கு விதித்த தூக்கு தண்டனை உறுதி

மனைவி உள்பட 5 பேரை கொன்ற வழக்கில் தொழிலாளிக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை செல்லும் என்று கீழ் கோர்ட்டு வழங்கிய தீர்ப்பை ஐகோர்ட்டு உறுதி செய்தது.

Update: 2023-06-10 21:22 GMT

பெங்களூரு:

மனைவி உள்பட 5 பேரை கொன்ற வழக்கில் தொழிலாளிக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை செல்லும் என்று கீழ் கோர்ட்டு வழங்கிய தீர்ப்பை ஐகோர்ட்டு உறுதி செய்தது.

5 பேர் கொலை

பல்லாரி மாவட்டத்தை சேர்ந்தவர் திப்பய்யா. தொழிலாளி. இவருக்கும் பக்கீரம்மா என்ற பெண்ணுக்கும் 12 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவருக்கு பசம்மா, நாகராஜ் மற்றும் பவித்ரா என 3 பிள்ளைகள் இருந்தனர். பக்கீரம்மாவின் சகோதரி கங்கம்மா, இவர்கள் வீட்டின் அருகே வசித்து வந்தார். இந்த நிலையில் தனது மனைவி பக்கீரம்மா மற்றும் கங்கம்மா 2 பேரும் விபசார தொழில் செய்து வருவதாகவும், அவர்களுக்கும் கிராமத்தை சேர்ந்த பலருக்கும் கள்ளத்தொடர்ப்பு இருந்து வந்ததாகவும் திப்பய்யா கருதினார்.

மேலும் இதுகுறித்து அவர் தனது மனைவியிடம் வாக்குவாதம் செய்து வந்தார். இந்த நிலையில் கடந்த 2017-ம் ஆண்டு இதுதொடர்பாக தம்பதி இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது ஆத்திரமடைந்த திப்பய்யா, வீட்டில் இருந்த கத்தியை எடுத்து தனது மனைவி பக்கீரம்மா, கங்கம்மா மற்றும் 3 பிள்ளைகளை சரமாரியாக குத்தினார். இதில் அவர்கள் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்து உயிரிழந்தனர்.

ஐகோர்ட்டு உறுதி செய்தது

இதுகுறித்து அறிந்ததும் பல்லாரி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து திப்பய்யாவை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை முடிவடைந்து பல்லாரி கோர்ட்டு திப்பய்யாவுக்கு தூக்கு தண்டனை விதித்தது. இந்த நிலையில் பல்லாரி கோர்ட்டின் உத்தரவை எதிர்த்து கர்நாடக ஐகோர்ட்டு தார்வார் கிளையில் மனு தாக்கல் செய்தார்.அந்த மனு மீதான விசாரணை ஐகோர்ட்டில் விசாரணை நடந்து வந்தது. இந்த வழக்கில் இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், நடத்தையில் சந்தேகப்பட்டு 5 கொலைகளை செய்தவர், தன்னை அறியாமல் செய்து இருக்க முடியாது எனவும், ஏற்கனவே திட்டமிட்டு இந்த கொலையை அரங்கேற்றி இருப்பதும் உறுதியாகி உள்ளது. இதனால் இந்த கொலை வழக்கில் பல்லாரி கோர்ட்டு வழங்கிய தூக்கு தண்டனை செல்லும் என்று நீதிபதிகள் கூறினர்.

Tags:    

மேலும் செய்திகள்