மைனர் பெண்ணை கடத்தி பலாத்காரம்: வாலிபருக்கு 20 ஆண்டு சிறை

மைனர் பெண்ணை கடத்தி பலாத்காரம் செய்த வாலிபருக்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து கோலார் கோர்ட்டில் தீர்ப்பு வழங்கப்பட்டது.

Update: 2023-06-10 21:15 GMT

கோலார்:

மைனர் பெண்ணை கடத்தி பலாத்காரம் செய்த வாலிபருக்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து கோலார் கோர்ட்டில் தீர்ப்பு வழங்கப்பட்டது.

மைனர் பெண்

கோலார் தாலுகா பகுதியில் வசித்து வந்தவர் வெங்கடேஷ்(வயது 19). இவர் கடந்த 2022-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் அதே பகுதியைச் சேர்ந்த 16 வயது மைனர் பெண்ணை கடத்திச் சென்றதாகவும், அவரை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் கூறப்படுகிறது. இதுபற்றி பாதிக்கப்பட்ட மைனர் பெண் தனது பெற்றோரிடம் கூறினார். அவர்கள் இதுபற்றி கோலார் மகளிர் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பைரா, இதுபற்றி வழக்குப்பதிவு செய்து வெங்கடேசை கைது செய்தார். மேலும் அவர் மீது கோலார் சிறப்பு கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு கோலார் சிறப்பு கோர்ட்டில் விசாரணை நடந்தது. விசாரணை முடிவடைந்த நிலையில் நீதிபதி தேவாமானே நேற்று முன்தினம் தீர்ப்பு வழங்கினார்.

20 ஆண்டு சிறை

அவர் வெங்கடேஷ் மீதான குற்றச்சாட்டு சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு 20 வருடங்கள் சிறைத்தண்டனையும், ரூ.35 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார். மேலும் பாதிக்கப்பட்ட மைனர் பெண்ணுக்கு ரூ.4 லட்சம் நஷ்ட ஈடு வழங்கவும் அவர் உத்தரவு பிறப்பித்தார். நீதிபதி தீர்ப்பு வழங்கிய போது குற்றவாளி வெங்கடேஷ் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு இருந்தார். தீர்ப்பு அறிவிக்கப்பட்டதும் போலீசார் வெங்கடேசை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் கோர்ட்டில் அரசு சார்பில் வக்கீல் லலிதா குமாரி ஆஜரானார்.

Tags:    

மேலும் செய்திகள்