பருத்தி இறக்குமதி வரியை குறைக்க வேண்டும்: மக்களவையில் டி.ஆர்.பாலு வலியுறுத்தல்

பருத்தி இறக்குமதி வரியை குறைக்க வேண்டும் என்று மக்களவையில் டி.ஆர்.பாலு வலியுறுத்தினார்.

Update: 2022-12-20 20:13 GMT

கோப்புப்படம்

புதுடெல்லி,

மக்களவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது தி.மு.க. உறுப்பினர் டி.ஆர்.பாலு பருத்தி மீதான இறக்குமதி வரி குறித்து பேசினார். அப்போது திருப்பூரில் 10 ஆயிரம் ஜவுளி நிறுவனங்கள் இருப்பதாகவும், அதில் சுமார் 6 லட்சம் தொழிலாளர்கள் வேலை பார்ப்பதாகவும் தெரிவித்த அவர், பருத்தி பற்றாக்குறையால் ஜவுளி உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது என்றும் கூறினார்.

"120 லட்சம் பேரல்களாக பருத்தியின் தேவை இருக்கும் நிலையில் நாட்டில் 3 முதல் 5 லட்சம் பேரல்களே உற்பத்தி செய்யப்படுகிறது. மீதமுள்ள பருத்தியின் தேவையை ஈடுகட்ட வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. ஆனால் அதற்கு 11 சதவீதம் வரி விதிக்கப்படுகிறது. இது சரியாகுமா? தேவைக்கும், அளிப்புக்கும் மிகப்பெரிய இடைவெளி உள்ளது. இறக்குமதி செய்தால் மட்டுமே தேவையை பூர்த்தி செய்ய முடியும். எனவே, பருத்தி இறக்குமதிக்கான வரியை குறைக்க வேண்டும்" என அவர் வலியுறுத்தினார்.

Tags:    

மேலும் செய்திகள்