ஊழல்வாதிகள் யாரும் அரசியல் - சமூக ஆதரவைப் பெறக்கூடாது: பிரதமர் மோடி
ஊழல்வாதிகள் யாரும் அரசியல் - சமூக ஆதரவைப் பெறக்கூடாது என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.;
புதுடெல்லி,
மத்திய லஞ்ச ஒழிப்பு துறையின் புகார் மேலாண்மை அமைப்பின் இணைய முகப்பை பிரதமர் மோடி டெல்லியில் இன்று தொடங்கி வைத்தார்.லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு வாரத்தை முன்னிட்டு புதிய இணைய முகப்பை பிரதமர் தொடங்கி வைத்தார். பின்னர் இந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி கூறியதாவது:-
ஊழலுக்கு எதிராக உறுதியாக போராடுவதற்கான நேரம் வந்துவிட்டது. தேசிய ஜனநாயக கூட்டணி அரசு வெளிப்படுத்துவதைப் போல் அரசின் ஒவ்வொரு துறையும் ஊழலுக்கு எதிராக தைரியத்துடன் செயல்பட வேண்டும்.
நாடு சுதந்திரம் அடைந்த இந்த 75-ம் ஆண்டில், பல தசாப்தங்களாக நிலவி வந்த இவற்றை நாம் முழுமையாக மாற்ற வேண்டும். தொழில்நுட்பம் மூலம் ஊழல் ஒழிப்பை சாத்தியப்படுத்த முடியும். பொது விநியோகத் திட்டத்தில் தொழில்நுட்பத்தை இணைத்ததன் காரணமாக, கோடிக்கணக்கான போலி பயனாளிகள் நீக்ககப்பட்டனர். இதன் மூலம் ரூ. 2 லட்சம் கோடி தவறானவர்களின் கைகளுக்குச் செல்வது தடுக்கப்பட்டுள்ளது.
ஊழல்வாதிகள் யாரும் அரசியல் - சமூக ஆதரவைப் பெறக்கூடாது. ஊழல்வாதிகள் ஒவ்வொருவரையும் சமூகம் சிறையில் தள்ள வேண்டும். ஊழல்வாதிகள் என்று நிரூபிக்கப்பட்ட பிறகும், ஊழல்வாதிகள் பலமுறை புகழப்படுவதைப் பார்த்திருக்கிறோம். இது நாட்டுக்கு நல்லதல்ல" என்றார்.