கொரோனாவை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும்- மாநிலங்களுக்கு, மத்திய சுகாதாரத்துறை வலியுறுத்தல்

நாட்டில் சமீப காலமாக கேரளா, மராட்டியம் உள்ளிட்ட சில மாநிலங்களில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருகிறது

Update: 2022-06-10 03:20 GMT

புதுடெல்லி,

நாட்டில் சமீப காலமாக கேரளா, மராட்டியம் உள்ளிட்ட சில மாநிலங்களில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருகிறது.நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில்  கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 7 ஆயிரத்தை கடந்துள்ளது .

இந்த நிலையில் மத்திய சுகாதார்த்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு எழுதியுள்ள கடிதத்தில்,

கொரோனா தொற்று சில மாநிலங்களில் அதிகரித்து வருவது குறித்து தனது கவலையை வெளிப்படுத்தி உள்ளார். வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளிடம் மேற்கொள்ளப்படும் பரிசோதனைகளின்போது மரபணு வரிசை முறையை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார். கொரோனா நோய்த்தொற்றை உடனடி மற்றும் திறம்பட கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை தொடர்ந்து செயல்படுத்துவதுடன் அதை கண்காணிக்க வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.

இது தொடர்பாக மத்திய சுகாதார அமைச்சகம் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்குத் தேவையான ஆதரவைத் தொடர்ந்து வழங்கும் என்றும் அவர் உறுதி கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்