இந்தியாவில் மேலும் 80 பேருக்கு கொரோனா: 2-வது நாளாக 100-க்குள் அடங்கியது

தொற்று மீட்பு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கையில் நேற்று 102 குறைந்தது.;

Update: 2023-06-13 19:53 GMT

புதுடெல்லி,

நமது நாட்டில் நேற்று தொடர்ந்து 2-வது நாளாக கொரோனா பாதிப்பு 100-க்குள் அடங்கியது. நேற்று முன்தினம் 92 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டது. நேற்று இந்த எண்ணிக்கை 80 ஆகக் குறைந்தது. இதுவரை தொற்றால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 49 லட்சத்து 92 ஆயிரத்து 960 ஆக அதிகரித்துள்ளது.

தொற்று பாதிப்பில் இருந்து நேற்று 181 பேர் குணம் அடைந்தனர். இதுவரை குணம் அடைந்தோர் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 44 லட்சத்து 58 ஆயிரத்து 820 ஆகும்.

தொற்று மீட்பு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கையில் நேற்று 102 குறைந்தது. இதையடுத்து தொற்று மீட்பு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 2,248 ஆகக் குறைந்துள்ளது.

தொற்றினால் நேற்று முன்தினம் ஒருவர் கூட இறக்கவில்லை. நேற்றும் அதே நிலை நீடித்தது. ஆனாலும் கேரளாவில் விடுபட்ட கொரோனா பலிகளில் ஒன்றைக் கணக்கில் கொண்டு வந்ததால், மொத்த பலி எண்ணிக்கை 5 லட்சத்து 31 ஆயிரத்து 892 ஆனது. 

Tags:    

மேலும் செய்திகள்