தொடரும் கனமழை... அசாமில் பள்ளிகள் திறப்பு ஜூலை 26 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு

கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக அசாமில் பள்ளிகள் திறப்பு ஜூலை 26 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.

Update: 2022-06-24 05:53 GMT

கோப்புப்படம் 

கவுகாத்தி,

அசாமில் கடந்த ஒரு வாரமாக இடைவிடாமல் கனமழை பெய்து வருகிறது. இதனால் ஆறுகளில் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது.மழை-வெள்ளம் ஒருபுறம் இருக்க பல இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டு பெருத்த சேதத்தை ஏற்படுத்தி வருகின்றன.

வெள்ளத்தில் சிக்கியுள்ள மக்களை மீட்கும் பணியில் ராணுவம் களமிறக்கப்பட்டு உள்ளது. இதைப்போல தேசிய-மாநில பேரிடர் மீட்புக்குழுவினர், போலீசாரும் இணைந்து இந்த மீட்பு பணிகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டு வருகின்றனர்

வெள்ளத்தால் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 7 பேர் உயிரிழந்துள்ளதால், அசாமில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 107 ஆக உயர்ந்துள்ளது .மேலும் 30 மாவட்டங்களில் வெள்ளம் காரணமாக 45 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக அசாமில் பள்ளிகள் திறப்பு ஜூலை 26 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.

 

Tags:    

மேலும் செய்திகள்