தொடர் கனமழை: புதுச்சேரி, காரைக்காலில் பள்ளி, கல்லூரிகளுக்கு 2 நாட்கள் விடுமுறை..!
தொடர் கனமழை காரணமாக புதுச்சேரி மற்றும் காரைக்காலில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு அடுத்த 2 நாட்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது.;
புதுச்சேரி,
தமிழகம் மற்றும் புதுவையில் வடகிழக்கு பருவமழை கடந்த 29-ந் தேதி தொடங்கியது. இதையடுத்து தமிழகம் மற்றும் புதுவையின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. புதுவை மற்றும் காரைக்காலிலும் கடந்த சில நாட்களாக மழை வெளுத்து வாங்கி வருகிறது.
இந்த நிலையில் கனமழை காரணமாக புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு அடுத்த 2 நாட்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது.
தொடர் கனமழை காரணமாக கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் இந்த அறிவிப்பை வெளியிட்டு உள்ளார்.