தேர்தலில் தொடர் தோல்வி... அரசியலில் இருந்து விலகுவதாக முன்னாள் கால்பந்து வீரர் அறிவிப்பு

சிக்கிம் ஜனநாயக முன்னணி துணைத் தலைவர் பைச்சுங் பூட்டியா, அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

Update: 2024-06-26 16:43 GMT

கேங்க்டாக்,

இந்திய கால்பந்து அணி முன்னாள் வீரரும், சிக்கிம் ஜனநாயக முன்னணி துணைத் தலைவருமான பைச்சுங் பூட்டியா கடந்த 10 ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தல்களில், இதுவரை 6 முறை தோல்வியை தழுவியுள்ளார். சமீபத்தில் நடந்த நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் சிக்கிம் மாநிலம் பர்புங் தொகுதியில் போட்டியிட்ட அவர், சுமார் 4 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார்.

இந்த நிலையில், 47 வயதான பைச்சுங் பூட்டியா அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், "2024 மக்களவை தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, தேர்தல் அரசியல் எனக்கானது இல்லை என்பதை நான் உணர்ந்து கொண்டேன். எனவே அனைத்து விதமான தேர்தல் அரசியலில் இருந்தும் நான் விலகிக் கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்