அரியானாவில் சரக்கு ரெயில் தடம் புரண்டு விபத்து
சரக்கு ரெயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானதில் அப்பகுதில் ரெயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
சண்டிகார்,
அரியானா மாநிலம் அம்பாலாவில் இருந்து டெல்லி நோக்கி சென்று கொண்டிருந்தது. அந்த சரக்கு ரெயிலானது இன்று அதிகாலை 4 மணிக்கு கர்னல் மாவட்டத்தில் உள்ள தாரோரி பகுதிக்கு அருகே சென்ற போது தடம் புரண்டு விபத்துக்குள்ளாது. இதில் ரெயிலின் 8 பெட்டிகள் தண்டவாளத்தில் கவிழ்ந்தது. இது குறித்து தகவல் அறிந்த ரெயில் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து டெல்லி-அம்பாலா வழித்தடத்தில் ரெயில் போக்குவரத்தை நிறுத்தினர்.
இதனைதொடர்ந்து, தண்டவாளத்தில் கவிழந்த பெட்டிகளை மீட்கும் பணியில் ரெயில்வே அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்த ரெயில் விபத்தில் யாருக்கும் காயங்கள் ஏற்படவில்லை. உயிரிழப்புகளும் பதிவாகவில்லை. ஆனால் பெட்டிகள் தண்டவாளத்தில் கவிழ்ந்ததால் அம்பாலா-டெல்லி ரெயில் சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. சரக்கு ரெயில் விபத்தில் சிக்கியது குறித்து ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.