பெங்களூருவில் இரும்பு கம்பி திருடிய கட்டிட தொழிலாளி அடித்து கொலை

பெங்களூருவில் இரும்பு கம்பி திருடிய கட்டிட தொழிலாளி அடித்து கொலை செய்யப்பட்டார்.;

Update: 2022-08-07 21:30 GMT

பெங்களூரு:

பீகாரை சேர்ந்தவர் அமர்நாத் (வயது 51). இவர் பெங்களூரு எலகங்கா மாருதிநகரில் குடும்பத்தினருடன் வசித்து வந்தார். கட்டிட தொழிலாளியாக அமர்நாத் வேலை செய்து வந்தார். இந்த நிலையில் பாகலூர் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட துவாரகாநகரில் உள்ள இரும்பு கடையில் அமர்நாத் இரும்பு கம்பிகளை திருடியதாக தெரிகிறது. அப்போது அமர்நாத்தை அந்த கடையின் உரிமையாளர் உள்பட 3 பேர் கையும், களவுமாக பிடித்து இரும்பு கம்பி மற்றும் குழாய்களால் தாக்கியதாக தெரிகிறது.

இதில் பலத்த காயம் அடைந்த அமர்நாத் பரிதாபமாக இறந்தார். இந்த கொலை சம்பவம் குறித்த புகாரின்பேரில் பாகலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாகிவிட்ட 3 பேரையும் வலைவீசி தேடிவருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்