தமிழ் காலனியில் வீடுகள் கட்டி கொடுக்கும் பணி; சி.டி. ரவி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்

சிக்கமகளூருவில் தமிழ் காலனியில் வீடுகள் கட்டி கொடுக்கும் பணியை சி.டி. ரவி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.;

Update: 2022-06-08 15:12 GMT

சிக்கமகளூரு;

சிக்கமகளூரு டவுன் அருகே உள்ள தமிழ் காலனியில் பொதுமக்களுக்கு பிரதான் மந்திரி அவாஸ் யோஜனா திட்டம் மற்றும் கர்நாடக கொலகேரி வளர்ச்சி குழு சார்பில் வீடுகள் கட்டி கொடுக்கும் பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் கலந்து கொண்ட, சிக்கமகளூரு தொகுதி எம்.எல்.ஏ. சி.டி.ரவி அடிக்கல் நாட்டினார். பின்னர் அவர் பேசியதாவது:-

மத்திய அரசு, மாநில அரசின் உதவியுடன் பொதுமக்களுக்கு வீடுகள் கட்டி கொடுக்கும் பணியை செய்து வருகிறது. அந்த வகையில் சிக்கமகளூருவில் தமிழ் காலனி பகுதியில் வீடுகள் இல்லாத, பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களை கண்டறிந்து அவர்களுக்கு அரசு சார்பில் வீடுகள் கட்டி கொடுக்கப்படும்.

மேலும், பொருளாதாரத்தில் வறுமை கோட்டிற்கு மேல் உள்ளவர்கள், ஆதிதிராவிடர், பிற்படுத்தப்பட்டவர்களுக்கு அரசு சார்பில் ரூ.2 லட்சம் கொடுக்கப்பட்டு வீடுகள் கட்ட உதவி செய்யப்படும். பொருளாதாரத்தில் முன்னேறிய பிரிவினருக்கு வீடு கட்ட ரூ.1½ லட்சம் வழங்கப்படும். இதனை பயன்படுத்தி பொதுமக்கள் தங்கள் வாழ்க்கை தரத்தை உயர்த்தி கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்