சிக்கமகளூருவில் ஒருங்கிணைந்த ஓட்டல் வளாகம் கட்டும் பணி தீவிரம்

சிக்கமகளூருவில் ஒருங்கிணைந்த ஓட்டல் வளாகம் கட்டும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

Update: 2022-11-16 17:04 GMT

சிக்கமகளூரு:-

சிக்கமகளூரு நகரசபையில் நேற்று 'புட் கோர்ட்' என்ற ஒருங்கிணைந்த ஓட்டல் வளாகம் கட்டுவதற்கான பூமி பூஜை நடந்தது. ரூ.5 கோடி செலவில் இந்த ஒருகிணைந்த ஓட்டல் வளாகம் அமைய உள்ளது. இந்த நிகழ்ச்சியில் முன்னாள் மந்திரி சி.டி.ரவி எம்.எல்.ஏ., மேல்சபை உறுப்பினர் பிரானேஷ், நகரசபை தலைவர் வேணுகோபால் உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த ஓட்டல் வளாகத்தில் 52 கடைகளும், 300 பேர் அமர்ந்து சாப்பிடுவதற்கான மேஜைகளும் அமைக்கப்பட உள்ளன. மேலும் குடிநீர், கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளும் அமைக்கப்பட இருக்கின்றன. தள்ளுவண்டி கடைகள் அமைத்து வியாபாரம் செய்யும் வியாபாரிகள் இந்த ஒருங்கிணைந்த ஓட்டல் வளாகத்தில் கடைகள் அமைத்து பயன்பெறலாம் என்று சிக்கமகளூரு நகரசபை தெரிவித்துள்ளது. இந்த ஓட்டல் வளாகத்தின் கட்டுமான பணிகள் தீவிரமாக நடந்து வருவதாகவும், ஜனவரி மாதத்திற்குள் அந்த பணிகள் முடிவடையலாம் என்றும் நகரசபை தலைவர் வேணுகோபால் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்