பெங்களூரு சூர்யநகரில் புதிதாக 30 ஆயிரம் வீட்டுமனைகள் உருவாக்கம்-வீட்டு வசதித்துறை மந்திரி சோமண்ணா பேட்டி

பெங்களூரு சூர்யநகரில் புதிதாக 30 ஆயிரம் வீட்டுமனைகள் உருவாக்கம் என்று வீட்டு வசதித்துறை மந்திரி சோமண்ணா தெரிவித்துள்ளார்.;

Update: 2022-08-19 21:39 GMT

பெங்களூரு: பெங்களூரு சூர்யநகர் 4-வது ஸ்டேஜில் புதிதாக 30 ஆயிரம் வீட்டுமனைகள் உருவாக்கப்பட்டுள்ளதாக வீட்டு வசதித்துறை மந்திரி சோமண்ணா கூறியுள்ளார்.

வீட்டு வசதித்துறை மந்திரி சோமண்ணா பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

வீட்டுமனைகள்

வீட்டு வசதித்துறை சார்பில் உருவாக்கப்படும் லே-அவுட்டுகளில் ஜி பிரிவின் கீழ் 5 சதவீத வீட்டு மனைகளை ஒதுக்க மந்திரிசபை ஒப்புதல் வழங்கியுள்ளது. பெங்களூரு சூர்யநகர் 4-வது ஸ்டேஜ் பகுதியில் புதிதாக 30 ஆயிரம் வீட்டு மனைகள் உருவாக்கப்பட்டுள்ளன. கர்நாடகத்தின் பிற பகுதிகளில் 50 ஆயிரம் வீட்டுமனைகள் ஒதுக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. தாவணகெரேயில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள லே-அவுட்டில் 6 ஆயிரம் வீட்டுமனைகள் குலுக்கல் மூலம் தகுதியான பயனாளிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.

பெங்களூரு, துமகூரு, ராமநகர், மண்டியா, மைசூரு, சிக்கமகளூரு, உடுப்பியில் உள்ள வீட்டு வசதி வாரிய லே-அவுட்டுகளில் 7 ஆயிரம் வீட்டுமனைகள் உருவாக்கப்பட்டுள்ளன. நகர மற்றும் கிராமப்புறங்களில் வீடுகளை கட்ட ரூ.7 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

ரூ.1,000 கோடி கடன்

பெங்களூருவில் ஒரு லட்சம் வீடுகள் கட்டும் பணி தொடங்கப்பட்டது. இதில் 48 ஆயிரம் வீடுகள் கட்டப்பட்டுள்ளன. இந்த வீடுகள் ஏழை மக்களுக்கு ஒதுக்கப்படும். இதில் நவம்பர் மாதத்தில் 16 ஆயிரம் வீடுகள் ஒதுக்கப்படும். குடிசை மாற்று வாரியம் மூலம் 60 ஆயிரம் வீடுகள் கட்டப்பட்டுள்ளன. இதில் வருகிற டிசம்பர் மாதத்திற்குள் 45 ஆயிரம் வீடுகள் பயனாளிகளுக்கு ஒதுக்கப்படும். ஹுட்கோ மூலம் ரூ.1,000 கோடி கடன் வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு சோமண்ணா கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்