காங்கிரஸ் யூடியூப் சேனல் நீக்கம் நாசவேலை காரணமா?

காங்கிரஸ் கட்சியின் யூ டியூப் சேனல் நேற்று திடீரென நீக்கப்பட்டது.;

Update: 2022-08-24 19:00 GMT

புதுடெல்லி, 

காங்கிரஸ் கட்சியின் யூ டியூப் சேனல் நேற்று திடீரென நீக்கப்பட்டது. இது கட்சிக்குள் பரபரப்பை ஏற்படுத்தியதுடன், இதற்கு நாசவேலை காரணமா என்ற கேள்வியையும் எழுப்பி உள்ளது.

இதுகுறித்து டுவிட்டரில் ஒரு பதிவிட்ட காங்கிரஸ் கட்சி, "இந்திய தேசிய காங்கிரஸ் என்னும் எங்களது யூ டியூப் சேனல் நீக்கப்பட்டுள்ளது. நாங்கள் அதை மீண்டும் கொண்டு வருவோம். இது தொடர்பாக கூகுள் மற்றும் யூ டியூப் குழுக்களுடன் தொடர்பில் உள்ளோம்" என குறிப்பிட்டுள்ளது.

மேலும், "இதற்கு காரணம் தொழில் நுட்ப கோளாறா அல்லது நாசவேலையா என்பது குறித்து நாங்கள் விசாரணை நடத்துகிறோம். விரைவில் வருவோம் என்று நம்புகிறோம்" எனவும் குறிப்பிட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்