சூரத் செசன்ஸ் கோர்ட்டு தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு - காங்கிரஸ் அறிவிப்பு

சூரத் செசன்ஸ் கோர்ட்டு தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய உள்ளதாக காங்கிரஸ் அறிவித்துள்ளது.;

Update: 2023-04-20 21:26 GMT

கோப்புப்படம்

புதுடெல்லி,

அவதூறு வழக்கில் ராகுல் காந்தி குற்றவாளி என அறிவித்த விசாரணை கோர்ட்டு தீர்ப்புக்கு சூரத் செசன்ஸ் கோர்ட்டு தடை விதிக்க நேற்று மறுத்து விட்டது.

இதையொட்டி காங்கிரஸ் செய்தி தொடர்பாளரும், மூத்த வக்கீலுமான அபிஷேக் சிங்வி, டெல்லியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

சூரத் கூடுதல் செசன்ஸ் கோர்ட்டு தீர்ப்பு தவறானது, சட்டத்தின் அனைத்து அடிப்படை அம்சங்களுக்கும் முரணானது. இந்தத் தீர்ப்புக்கு எதிராக குஜராத் ஐகோர்ட்டில் விரைவில் மேல்முறையீடு செய்வோம்.

தீர்ப்பில் சட்டத்தவறு உள்ளது. நாங்கள் எல்லா கோர்ட்டுகளையும் மதிக்கிறோம். நாங்கள் ஐகோர்ட்டு, சுப்ரீம் கோர்ட்டையும் பெற்றிருக்கிறோம். அந்தத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வதற்கு பல அடிப்படை அம்சங்கள் இருக்கின்றன. இவ்வாறு அவர் கூறினார்.

குஜராத் ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்கிறபோது, ராகுல் தரப்பில் அபிஷேக் சிங்வி ஆஜராகி வாதாடுவார் என தகவல்கள் கூறுகின்றன.

Tags:    

மேலும் செய்திகள்