காங்கிரஸ் காரிய கமிட்டி குழு மாற்றியமைப்பு - மல்லிகார்ஜுன கார்கே உத்தரவு
காங்கிரஸ் காரிய கமிட்டி குழு மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
டெல்லி,
காங்கிரஸ் கட்சியின் முக்கிய முடிவுகளை அக்கட்சியின் முக்கிய தலைவர் அடங்கிய காரிய கமிட்டி குழு எடுக்கிறது. இந்த காரிய கமிட்டியில் சோனியா காந்தி, ராகுல்காந்தி உள்பட பல தலைவர்கள் இடம்பெற்றுள்ளனர்.
இந்நிலையில், காங்கிரஸ் காரிய கமிட்டியின் குழு மாற்றியமைக்கப்படுவதாக அக்கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இன்று அறிவித்துள்ளார். அதன்படி, மூத்த தலைவர்கள் 39 பேர் கொண்ட காரிய கமிட்டி குழுவை கார்கே அறிவித்துள்ளார். இந்த குழுவில் கார்கே, சோனியா காந்தி, ராகுல்காந்தி, மன்மோகன் சிங், ப.சிதம்பரம், பிரியங்கா காந்தி, சசி தரூர், சச்சின் பைலட் உள்பட 39 பேர் இடம்பெற்றுள்ளனர்.