சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் ராகுல் காந்தியின் தாயாருமான சோனியா காந்தி உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.;
புதுடெல்லி,
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். லேசான காய்ச்சல் அறிகுறி காரணமாக டெல்லியில் உள்ள சர் கங்காராம் மருத்துவமனையில் சோனியா காந்தி அனுமதிக்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது மருத்துவர்களின் கண்காணிப்பில் சோனியா காந்தி இருப்பதாகவும் அவரது உடல் நிலை சீராக உள்ளதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் கூறுகின்றன.