காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை யாத்திரை... இந்திய முன்னாள் கேப்டன் பங்கேற்பு
இந்திய ஒற்றுமை யாத்திரையில் ராகுல் காந்தியோடு, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் அசாருதீனும் பங்கேற்றார்.;
தெலங்கானா,
தெலங்கானாவில் நடைபெற்ற இந்திய ஒற்றுமை யாத்திரையில் ராகுல் காந்தியோடு, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் அசாருதீனும் பங்கேற்றார்.
ராகுல் காந்தி தலைமையிலான இந்திய ஒற்றுமை யாத்திரை, 3 நாட்கள் ஓய்வுக்கு பிறகு நேற்று தெலங்கானாவில் நேற்று மீண்டும் தொடங்கியது.
தெலங்கானாவின் மக்தாலில் நடைபெற்ற யாத்திரையில், ராகுல் காந்தியோடு இணைந்து இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், தெலங்கானா காங்கிரஸ் கமிட்டியின் செயல் தலைவருமான முகமது அசாரூதீனும் நடை பயணம் மேற்கொண்டார்.