காங்கிரஸ் எம்.எல்.ஏ. மீதான வழக்கு ரத்து
காங்கிரஸ் எம்.எல்.ஏ. மீதான வழக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது.
பெங்களூரு: பெங்களூரு சிவாஜிநகர் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ.வாக இருந்து வருபவர் ரிஷ்வான் ஹர்ஷத். இவர், கடந்த 2019-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 13-ந் தேதி ஸ்ரீராம உற்சவம் சந்தர்ப்பத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி இடைத்தோ்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு இருந்தார். இதுதொடர்பாக ரிஷ்வான் ஹர்ஷத் மீது தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருந்த்து.
தன் மீது பதிவான வழக்கை ரத்து செய்ய கோரி கர்நாடக ஐகோர்ட்டில் அவர் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, ரிஷ்வான் ஹர்ஷத் எம்.எல்.ஏ. மீது பதிவான வழக்கை ரத்து செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது.