'காங்கிரசார், சட்டத்தை விட மேலானவர்கள் அல்ல' - பா.ஜ.க. காட்டம்
காங்கிரசார், சட்டத்தை விட மேலானவர்கள் அல்ல என்று பா.ஜ.க. சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.;
புதுடெல்லி,
பிரதமர் மோடி பற்றிய அவதூறு கருத்துக்காக காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் பவன் கெரா நேற்று கைது செய்யப்பட்டதையொட்டி பா.ஜ.க. கருத்து தெரிவித்துள்ளது.
இது பற்றி அந்தக் கட்சியின் செய்தி தொடர்பாளர் கவுரவ் பட்டியா , டெல்லியில் நிருபர்களிடம் கூறுகையில், "என்ன நடந்தாலும் சட்டப்படிதான் நடக்கிறது. காங்கிரஸ் கட்சியினர் சட்டத்தை விட தாங்கள் மேலானவர்கள் என்ற தவறான கருத்தின் கீழ் இருக்கக்கூடாது" என குறிப்பிட்டார்.
மேலும், "பிரதமர் மோடிக்கும், அவரது குடும்பத்தினருக்கும் எதிராக கண்ணியக்குறைவான வார்த்தைகளை பயன்படுத்தி விட்டு, இப்போது காங்கிரஸ் கட்சி பாதிக்கப்பட்டவர் போல பவன் கெராவை வைத்து நாடகமாடுகிறது" எனவும் சாடினார்.