சித்தராமையாவிடம் காங்கிரஸ் மேலிடம் சரண் அடைந்துவிட்டது- பா.ஜனதா விமர்சனம்

சித்தராமையாவிடம் காங்கிரஸ் மேலிடம் சரண் அடைந்துவிட்டது என்று பா.ஜனதா விமர்சித்துள்ளது.;

Update: 2022-07-14 16:38 GMT

பெங்களூரு: கர்நாடக பா.ஜனதா செய்தித்தொடர்பாளர் சலவாதி நாராயணசாமி பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:- கர்நாடக காங்கிரஸ் கட்சி தலைவர் டி.கே.சிவக்குமார் அதிகாரம் இல்லாத தலைவராக உள்ளார். சித்தராமையாவை கண்டு காங்கிரஸ் பயப்படுகிறது. தேவராஜ் அர்சை விட அதிக தலைமை பண்பை கொண்டவர் சித்தராமையா என்று பரமேஸ்வர் கூறியுள்ளார். ஒருபுறம் சித்தராமோத்சவா மற்றொரு புறம் டி.கே.சிவக்குமாராத்சவா என்று விழாக்களை காங்கிரஸ் நடத்தி கொண்டிருக்கிறது.

இது அக்கட்சியின் உள்கட்சி விவகாரம். ஆனால் ஒரு அரசியல் கட்சியாக அவர்கள் மக்களுக்கு என்ன மாதிரியான செய்தியை வெளிப்படுத்துகிறார்கள் என்பது முக்கியம். காங்கிரஸ் மேலிடம் சித்தராமையாவிடம் சரண் அடைந்துவிட்டது. அந்த அளவுக்கு காங்கிரஸ் மிக மோசமான நிலையில் உள்ளது. காங்கிரஸ் மேலிடம் தனது அனைத்து பலத்தையும் இழந்துவிட்டது. சித்தராமையா தலித் விரோதி மட்டுமல்ல, லிங்காயத் சமூக விரோதியாகவும் மாறியுள்ளார். ஆதிதிராவிடர், பழங்குடியினரின் மேம்பாட்டிற்கு பா.ஜனதா அரசு எதையும் செய்யவில்லை என்று சித்தராமையா சொல்கிறார். இது தவறு.

இவ்வாறு சலவாதி நாராயணசாமி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்