சித்தராமையா வீட்டு முன்பு காங்கிரசார் அரை நிர்வாண போராட்டம்

Update: 2023-03-30 21:41 GMT

பெங்களூரு:-

கர்நாடக சட்டசபைக்கு மே மாதம் 10-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. காங்கிரஸ் கட்சி சார்பில் 124 வேட்பாளர்களின் முதற்கட்ட பட்டியல் வெளியாகி உள்ளது. இந்த நிலையில், சித்ரதுர்கா மாவட்டம் மொலகால்மூரு தொகுதியில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த யோகேஷ் பாபு தனக்கு சீட் கொடுக்க வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர்களிடம் கேட்டு வருகிறார். ஆனால் அந்த தொகுதியில் பா.ஜனதாவில் இருந்து காங்கிரசுக்கு வர உள்ள ஒருவருக்கு சீட் கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுபற்றி அறிந்த யோகேஷ் பாபு ஆதரவாளர்கள் சித்ரதுர்காவில் இருந்து பெங்களூருவில் உள்ள எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா வீட்டுக்கு வந்தனர்.

பின்னர் சித்தராமையா வீட்டு முன்பு யோகேஷ் பாபுவுக்கு சீட் கொடுக்கும்படி கூறி ஆதரவாளர்கள் அரை நிர்வாண போராட்டத்தில் ஈடுபட்டனர். சித்தராமையாவின் காரையும் தடுத்த நிறுத்த முயன்றனர்.இதுபோல், பெங்களூரு தாசரஹள்ளி தொகுதி காங்கிரஸ் கட்சி தொண்டர்களும் சித்தராமையா வீட்டு முன்பு போராட்டத்தில் ஈடுபட்டார்கள். இந்த சம்பவங்களால் சித்தராமையா வீட்டு முன்பு நேற்று பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்