நாட்டின் எல்லைகளில் சாலை அமைக்க காங்கிரஸ் அரசு பயப்பட்டது - பிரதமர் மோடி சாடல்

காங்கிரஸ் ஆட்சியில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிக அளவில் இருந்ததாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

Update: 2023-05-31 15:03 GMT

ஜெய்ப்பூர்,

மத்தியில் பிரதமர் மோடி தலையிலான பாஜக ஆட்சி பொறுப்பேற்று 9 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதை நாடு முழுவதும் பாஜகவினர் கொண்டாடிவருகின்றனர். அந்த வகையில், ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீரில் பாஜக சார்பில் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்றார்.

நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, 2014ம் ஆண்டுக்கு முன் நாட்டின் நிலைமை என்ன? ஊழலுக்கு எதிராக வீதிகளில் மக்கள் போராடினர். பெரிய நகரங்களில் பயங்கரவாத தாக்குதல்கள் நடைபெற்றது. நாட்டின் எல்லைபகுதியில் சாலைகள் அமைக்க காங்கிரஸ் அரசு பயப்பட்டது.

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகமாக இருந்தது. பிரதமருக்கு மேல் உச்சபட்ச அதிகாரம் ஒருவரிடம் இருந்தது. ரிமோர்ட் கண்ட்ரோல் மூலம் காங்கிரஸ் அரசு செயல்பட்டது. இளைஞர்களின் கண்முன்னே இருள் சூழ்ந்திருந்தது. இன்று இந்தியா உலகம் முழுவதும் பாராட்டப்படுகிறது' என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்