மல்லிகார்ஜுன கார்கேவுக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உயிருக்கு ஆபத்து இருப்பதாக மத்திய உளவுத்துறை தகவல் அளித்துள்ளது.;

Update: 2024-02-22 13:53 GMT

புதுடெல்லி,

இசட், இசட் ப்ளஸ், எக்ஸ், ஒய், ஆகிய நான்கு பிரிவுகளின் கீழ் அரசியல் கட்சி தலைவர்களுக்கும், வி.ஐ.பி.களுக்கும் மத்திய உள்துறை அமைச்சகம் பாதுகாப்பு அளித்து வருகிறது. இசட் பிளஸ் என்பது மிக மிக உயரிய பாதுகாப்பு பிரிவாகும். ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, பிரதமர், சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி, மற்றும் மிகுந்த அச்சுறுத்தல் உள்ள அரசியல் கட்சித் தலைவர்களுக்கு மட்டுமே இசட் பிளஸ் பாதுகாப்பு அளிக்கப்படும். இசட் பிளஸ் பாதுகாப்பில் நாள் ஒன்றுக்கு 36 வீரர்கள் 3 வேளை சுழற்சி முறையில் பணியில் இருப்பார்கள்.

இந்தநிலையில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்க மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

காங்கிரஸ் கட்சியின் தலைவராக பதவி வகித்து வருபவர் மல்லிகார்ஜுன கார்கே.இந்நிலையில், கார்கேவின் உயிருக்கு ஆபத்து இருப்பதாக மத்திய உளவுத்துறை தகவல் அளித்ததையடுத்து மத்திய உள்துறை அமைச்சகம் அவருக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்க உத்தரவிட்டுள்ளது.

அதன்படி, இனி 40 முதல் 50 கமாண்டோ படை வீரர்கள் கார்கேவை பாதுகாக்கும் பணியில் ஈடுபடுவார்கள். நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு மத்திய அரசு இசட் பிளஸ் பாதுகாப்பை அளித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்