ஊழல், விலைவாசி உயர்வை கண்டித்து குஜராத்தில் இன்று முழு அடைப்பு போராட்டம் - காங்கிரஸ் அறிவிப்பு

குஜராத்தில் பாஜக ஆட்சியில் விலைவாசி உயர்வு, ஊழல், வேலைவாய்ப்பின்மையை கண்டித்து காங்கிரஸ் சார்பில் இன்று முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.;

Update: 2022-09-09 22:49 GMT

காந்திநகர்,

குஜராத் மாநிலத்தில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. கடந்த 27 ஆண்டுகளாக குஜராத்தில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், பாஜக ஆட்சியில் குஜராத்தில் விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம், ஊழல் அதிகரித்துள்ளதாக காங்கிரஸ் குற்றஞ்சாட்டியுள்ளது.

மேலும், பாஜக ஆட்சியில் குஜராத்தில் விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம், ஊழல் அதிகரித்து வருவதை கண்டித்து காங்கிரஸ் சார்பில் மாநிலம் முழுவதும் இன்று முழு அடைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இன்று காலை 8 மணி முதல் 12 வரை முழு அடைப்புக்கு காங்கிரஸ் அழைப்பு விடுத்துள்ளது. வணிகர்கள், ஆட்டோ சங்கங்கள் உள்பட அனைத்து தரப்பினரும் தங்கள் முழு அடைப்பு போராட்டத்திற்கு ஆதரவு தரும்படி காங்கிரஸ் மாநில தலைவர் அழைப்பு விடுத்துள்ளார்.    

Tags:    

மேலும் செய்திகள்