என்ன ஊரையா இது..? பக்கத்துவீட்டு கணவர்கள் மீது மனைவிகள் பரஸ்பரம் பலாத்கார புகார்

உத்தர பிரதேசத்தில் பக்கத்துவீட்டு கணவர்கள் மீது மனைவிகள் பரஸ்பரம் அளித்த பாலியல் பலாத்கார புகாரில் மருத்துவ அறிக்கை அடிப்படையில் ஒருவர் கைது செய்யப்பட்டார்.;

Update: 2023-02-21 12:01 GMT



கான்பூர்,


உத்தர பிரதேசத்தின் கான்பூர் நகரில் சச்சேந்தி பகுதியில் போலீசாரிடம் விசித்திர வழக்கு பதிவாகி உள்ளது. அதில், பெண் ஒருவர் தனது பக்கத்து வீட்டில் வசிக்கும் பெண்ணின் கணவர் மீது பாலியல் பலாத்கார புகார் அளித்து உள்ளார்.

இதனை தொடர்ந்து, புகாருக்கு ஆளான நபரின் மனைவி, புகாரளித்த பெண்ணின் கணவர் மீது பாலியல் பலாத்கார புகார் அளித்து உள்ளார். 48 மணிநேரத்திற்குள் அடுத்தடுத்து போலீசில் பலாத்கார புகார் அளிக்கப்பட்டு உள்ளது. இதற்கு முன் இதுபோன்று கேள்விப்பட்டதே இல்லை என உத்தர பிரதேச போலீசார் கூறுகின்றனர்.

எனினும், 2-வது புகார் அளித்த பெண்ணின் கணவர் கைது செய்யப்பட்டு விட்டார். முதலில் புகார் அளித்த பெண்ணின் கணவரை கைது செய்யும் நடவடிக்கை எடுக்கப்படாமல் உள்ளது.

போலீசார், பாதிக்கப்பட்ட இரு பெண்களையும் மருத்துவ பரிசோதனைக்கு அழைத்து சென்று உள்ளனர். அதன் அடிப்படையில் கிடைக்க கூடிய, 2-வது புகார் அளித்த பெண்ணின் மருத்துவ அறிக்கை முடிவின் பேரிலேயே முதல் புகார் அளித்த பெண்ணின் கணவரின் கைது நடவடிக்கை எடுக்கப்படும்.

முதலில் புகார் அளித்த பெண், எப்.ஐ.ஆர். பதிவு செய்யாவிட்டால் தீக்குளித்து விடுவேன் என போலீசாரை மிரட்டியும் உள்ளார். பழைய பகையால் இதுபோன்று நடந்திருக்க கூடும் என போலீசார் கூறினாலும், மருத்துவ அறிக்கை மற்றும் தொடர் விசாரணை முடிவிலேயே விவரங்கள் தெரிய வரும் என கூறப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்