கேரளாவில் பெண் தயாரிப்பாளர் அளித்த புகார் - தயாரிப்பாளர் சங்கத்தைச் சேர்ந்த 9 பேர் மீது வழக்கு

கேரளாவில் பெண் திரைப்பட தயாரிப்பாளரிடம் அவமரியாதையாக நடந்து கொண்டதாக, தயாரிப்பாளர் சங்கத்தைச் சேர்ந்த 9 பேர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.

Update: 2024-10-10 17:54 GMT

திருவனந்தபுரம்,

கேரளாவில் திரைப்படத் துறையில் பாலியல் புகார்கள் குறித்து விசாரிக்க கேரள அரசால் அமைக்கப்பட்ட சிறப்பு விசாரணை குழு சார்பில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. இந்நிலையில் பெண் திரைப்பட தயாரிப்பாளர் ஒருவர் அளித்த புகாரின் பேரில், தயாரிப்பாளர் சங்கத்தைச் சேர்ந்த 9 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

திரைப்பட துறையில் உள்ள பிரச்சனை தொடர்பாக கேரள தயாரிப்பாளர்கள் சங்கத்தில் புகார் அளித்தபோது, தன்னிடம் அவமரியாதையாக நடந்து கொண்டதாக பெண் தயாரிப்பாளர் சிறப்பு விசாரணை குழுவிடம் புகார் அளித்தார். இந்த புகாரின் மீது விசாரணை மேற்கொண்ட சிறப்பு விசாரணை குழுவினர், இது தொடர்பாக வழக்கு பதிவு செய்ய போலீசாரிடம் பரிந்துரைத்தனர்.

இதனை தொடர்ந்து எர்ணாகுளம் போலீசார் தயாரிப்பாளர் சங்கத்தைச் சேர்ந்த 9 பேர் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதன்படி திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவர் ஆன்டோ ஜோசப், தயாரிப்பாளர்கள் லிஸ்டின் ஸ்டீபன், பி.ராகேஷ் உள்ளிட்ட 9 பேர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Full View

Tags:    

மேலும் செய்திகள்