மகன், மருமகள் மீது போலீசில் பழம்பெரும் நடிகை புகார்

வீட்டை எழுதி கொடுக்க கூறி கொடுமைப்படுத்துவதாக மகன், மருமகள் மீது போலீசில் பழம்பெரும் நடிகை புகார் அளித்துள்ளார்.

Update: 2023-06-21 21:02 GMT

பெங்களூரு:

கன்னட திரைஉலகில் பழம்பெரும் நடிகையாக இருந்து வருபவர் சியாமளாதேவி. இவரது மகன் நிதின். இவருக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த நிலையில் நிதின் திருமணம் செய்த பிறகு, தனது தாய் சியாமளாதேவி பெயரில் உள்ள வீட்டை தனது பெயருக்கு மாற்றி எழுதிகேட்டு தொல்லை கொடுத்து வருவதாக கூறப்படுகிறது. நிதின் மற்றும் அவரது மனைவி 2 பேரும் சேர்ந்து சியாமளாதேவியை கொடுமைப்படுத்தியதுடன், அவதூறாகவும் பேசி உள்ளனர். இதனால் அவர் மனமுடைந்து காணப்பட்டார். இந்த நிலையில் சியாமளாதேவி, தனது மகன் மற்றும் மருமகள் மீது பசவனகுடி மகளிர் போலீசில் புகார் அளித்தார். அதில் தனது மகன், மருமகள் ஆகியோர் தனது பெயரில் உள்ள வீட்டை எழுதி கேட்டு கொடுமைப்படுத்துவதாக கூறி இருந்தார். அந்த புகாரை ஏற்ற போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்