சிக்கமகளூருவில் வருகிற 15-ந்தேதி ஜனசங்கல்ப யாத்திரை- முதல்-மந்திரி பசவராஜ் பொம்ைம பங்கேற்பு
சிக்கமகளூருவில் வருகிற 15-ந்தேதி நடக்கும் ஜனசங்கல்ப யாத்திரையில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்ைம பங்கேற்றார்.
சிக்கமகளூரு: கர்நாடக பா.ஜனதா சார்பில் ஜனசங்கல்ப யாத்திரை நடத்தப்பட்டு வருகிறது. இந்த யாத்திரையில் மாநில முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை, முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா ஆகியோர் கலந்துகொண்டு பிரசாரம் செய்து வருகிறார்கள். இந்நிலையில் வருகிற 15-ந் தேதி சிக்கமகளூரு மாவட்டம் கடூரில் ஜனசங்கல்ப யாத்திரை நடக்கிறது. இந்த யாத்திைரயில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கலந்துகொண்டு பேசுகிறார்.
இதையொட்டி அங்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. மேலும் அங்கு மேடை அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. முதல்-மந்திரி வருகையையொட்டி கடூரில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் நிகழ்ச்சி நடக்கும் பகுதியை உயர் போலீஸ் அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.