காதலை நிராகரித்த மாணவி: கத்தியால் குத்தி கொலை செய்து விட்டு தானும் குத்திக் கொண்ட மாணவன்

காதலை நிராகரித்த மாணவி: கத்தியால் குத்தி கொலை செய்து விட்டு தானும் குத்தி கொண்ட மாணவன்;

Update: 2023-01-02 11:22 GMT

பெங்களூரு

கர்நாடக மாநிலம் கோலார் கிராமத்தை சேர்ந்த பவன் கல்யாண் (23) பிடெக் படித்து வந்தார். அதே கிராமத்தைச் சேர்ந்த லயஸ்மிதா (19) பிரசிடென்சி கல்லூரியில் படித்து வந்தார். இருவரும் ஒருவருக்கொருவர் நட்பாக பழகி வந்தனர்.

இந்த நிலையில் இன்று மத்திய கல்லூரி வந்த பவன் லயஸ்மிதாவுன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு உள்ளார் பின்னர் மறைத்து வைத்து இருந்த கத்தியை எடுத்து மாண்வையை சரமாறியாக் குத்தினார். இதில் லயஸ்மிதா ரத்த வெள்ளத்தில் அதே இடத்தில் சரிந்தார்.சம்பவத்தை தொடர்ந்து லயஸ்மிதாஅருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அங்கு அவர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.

லயஸ்மிதாவை கத்தியால் குத்தி கொலை செய்த பின்னர் பவன் தன்னைத்தானே கத்தியால் குத்திக் கொண்டார்.அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.தற்போது அவர் நிலமை கவலைக்கிடமாக உள்ளது.

தாக்குதலுக்கான காரணம் இன்னும் தெரியவில்லை. தாக்குதல் நடத்தியவர் அதே கல்லூரியைச் சேர்ந்தவர் அல்ல.

தாக்குதலுக்கான காரணம் இன்னும் தெரியவில்லை. தாக்குதல் நடத்தியவர் அதே கல்லூரியைச் சேர்ந்தவர் அல்ல என கூறப்படுகிறது.

தனது காதலை நிராகரித்ததற்காக மாணவியை கல்லூரி வளாகத்திலேயே பவன் கத்தியால் குத்தி கொலை செய்துள்ளதாக கூறப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்