கல்லூரி மாணவி பாலியல் பலாத்காரம்; ஆட்டோ டிரைவர் 'போக்சோ'வில் கைது

திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி கல்லூரி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த ஆட்டோ டிரைவரை போலீசார் ‘போக்சோ’ சட்டத்தில் கைது செய்துள்ளனர்.

Update: 2022-06-18 15:10 GMT

சிக்கமகளூரு;

திருமணம் செய்வதாக...

சித்ரதுர்கா மாவட்டம் செல்லகெரே பகுதியை சேர்ந்த 17 வயது மைனர் பெண் தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். இவர், அதே பகுதியில் உள்ள கல்லூரியில் பி.யூ.சி. முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.

இந்த நிலையில் மைனர் பெண், நாகன்கெரே பகுதியை சேர்ந்த நவீன் (19) என்பவரின் ஆட்டோவில் கல்லூரிக்கு சென்று வந்துள்ளார். இதனால் அவர்களுக்குள் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் அது காதலாக மாறியுள்ளது.

இந்த நிலையில் நவீன், மைனர்பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிகிறது. இவர்கள் காதல் குறித்து மைனர்பெண்ணின் பெற்றோருக்கு தெரியவந்தது. இதனால் பெற்றோர், மைனர்பெண்ணை கண்டித்துள்ளனர்.

'போக்சோ'வில் கைது

இந்த நிலையில் கடந்த 13-ந்தேதி அந்த மைனர் பெண் யாருக்கும் தெரியாமல் வீட்டை விட்டு வெளியேறி நவீனுடன் சென்றதாக தெரிகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த மைனர்பெண்ணின் பெற்றோர், நவீன் தங்களது மகளை கடத்தி சென்றுவிட்டதாக செல்லகெரே போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் நவீனை கைது செய்தனர். மேலும் மைனர்ெபண்ணையும் மீட்டனர்.

மேலும் அந்த மைனர்பெண்ணிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், நவீன் தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி பலாத்காரம் செய்ததாக தெரிவித்தார். இதையடுத்து நவீன் மீது போலீசார் 'போக்சோ' சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்