கல்லூரி பேராசிரியை தூக்குப்போட்டு தற்கொலை
கல்லூரி பேராசிரியை தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
பெங்களூரு: பெங்களூரு ஞானபாரதி போலீஸ் எல்லைக்குட்பட்ட ஞானஜோதிநகரில் வசித்து வந்தவர் சைத்ரா (வயது 41). இவர் என்ஜினீயரிங் கல்லூரியில் பேராசிரியையாக பணியாற்றி வந்தார். இவரது கணவர் குருபிரசாத், ஹாவேரியில் உள்ள பல்கலைக்கழகத்தில் பதிவாளராக பணியாற்றி வருகிறார்.
இதனால் குருபிரசாத், 2 பிள்ளைகளுடன் ஹாவேரியில் வசித்து வருகிறார். சைத்ரா மட்டும் பெங்களூருவில் தனியாக வசித்து வந்தார். இந்த நிலையில் நேற்று வீட்டில் சைத்ரா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி அறிந்ததும் ஞானபாரதி போலீசார் அங்கு சென்று சைத்ரா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில் உடல்நலக்குறைவால் சைத்ரா தற்கொலை செய்து கொண்டது தெரியவந்து உள்ளது.