டெல்லியில் நிலவும் கடுங்குளிர்; பயணிகளுக்கு விமான நிலையம் எச்சரிக்கை, ரெயில்கள் காலதாமதம்

டெல்லியில் கடுங்குளிரை முன்னிட்டு பயணிகளுக்கு டெல்லி விமான நிலையம் எச்சரிக்கை விடுத்து உள்ளது.;

Update: 2023-01-05 04:21 GMT



புதுடெல்லி,


வடஇந்தியா முழுவதும் கடுங்குளிரால் மக்கள் வாடி வருகின்றனர். டெல்லியில் இந்த குளிர்கால பருவத்தில் கடுமையான அடர்பனி சூழல் ஏற்பட்டு, தெளிவற்ற வானிலை காணப்படுகிறது.

இதனை முன்னிட்டு, ரெயில்கள் காலதாமதமுடன் இயக்கப்படுகின்றன. வடக்கு ரெயில்வேக்கு உட்பட்ட மண்டலத்தில் 12 ரெயில்கள் காலதாமதமுடனும், 2 ரெயில்கள் காலஅட்டவணை மாற்றியமைக்கப்பட்டும் உள்ளது.

அதிக பனி மற்றும் தெளிவாக பார்க்க கூடிய சூழல் காணப்படவில்லை. அதனால் இந்த நிலை ஏற்பட்டு உள்ளது. டெல்லியில் கார், பைக் உள்ளிட்ட வாகன போக்குவரத்தும் பாதிப்படைந்து உள்ளது. காலையிலேயே முகப்பு விளக்குகளை எரிய விட்டபடி அவை செல்கின்றன.

டெல்லியில், குறைந்தபட்ச வெப்பநிலையானது, தர்மசாலா (5.2 டிகிரி), நைனிடால் (6 டிகிரி) மற்றும் டேராடூன் (4.5 டிகிரி) ஆகிய நகரங்களை விட குறைவாக உள்ளது. டெல்லி பல்கலை கழகத்திற்கு ஒட்டிய பகுதியில் குளிர்கால அலை வீசி வருகிறது.

இதனால், பல இடங்களில் அதிகபட்ச வெப்பநிலையே 13 டிகிரி முதல் 15 டிகிரி செல்சியஸிற்கு உள்ளேயே பதிவாகி வருகிறது என இந்திய வானிலை ஆய்வு மைய விஞ்ஞானி ஜெனாமணி கூறியுள்ளார். அடுத்த 24 முதல் 36 மணிநேரத்திற்கு குளிரலை வீசும் என அவர் கூறியுள்ளார்.

கடுங்குளிர், குளிர் அலை, தெளிவற்ற வானிலை ஆகியவற்றால் பயணிகளுக்கு டெல்லி விமான நிலையம் கவனமுடன் இருக்கும்படி இன்று எச்சரிக்கை விடுத்து உள்ளது. விமானங்கள் தற்போது சீராக இயக்கப்பட்டு வருகின்றன.

இதேபோன்று, அடுத்த விமான இயக்கம் பற்றிய விவரங்களை பயணிகள், விமான நிறுவன பணியாளர்களை தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளும்படி விமான நிலைய அதிகாரிகள் கேட்டு கொண்டுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்