காபி தோட்ட தொழிலாளிகளை அச்சுறுத்திய நாகபாம்பு பிடிபட்டது
காபி தோட்ட தொழிலாளிகளை அச்சுறுத்திய நாகபாம்பு பிடிப்பட்டது.;
சிக்கமகளூரு:-
சிக்கமகளூரு மாவட்டம் பாபாபுடன் கிரி அருகே அந்திகுந்தி கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் உள்ள காபி தோட்டம் ஒன்றில் கடந்த ஒரு வாரமாக 12 அடி நீள நாகபாம்பு ஒன்று சுற்றி வந்தது. இதைப்பார்த்த காபி தோட்ட ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் அந்த நாகபாம்பை அங்கிருந்து விரட்ட முயற்சித்தனர். ஆனால் முடியவில்லை. அந்த நாகபாம்பு தொழிலாளர்களை அச்சுறுத்தி வந்தது. இதனால் காபி தோட்டத்திற்கு செல்ல கூலி தொழிலாளிகள் மிகவும் அச்சம் அடைந்தனர். இந்நிலையில் நாகபாம்பை பிடிக்கும்படி பாம்புபிடி வீரரான நரேஷ் என்பவருக்கு தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு சென்ற அவர் நாகபாம்பை லாவகமாக பிடித்தார். பின்னர் அந்த பாம்பை சிக்கமகளூருவில் உள்ள வனப்பகுதியில் கொண்டு சென்று விட்டார். இதையடுத்து கூலி தொழிலாளிகள் இயல்பாக தங்கள் பணிகளை செய்ய தொடங்கினர்.