மும்பை விமானநிலையத்தில் ரூ.9.8 கோடி போதைப்பொருளுடன் ஒருவர் கைது

மும்பை விமான நிலையத்தில் ரூ.9.8 கோடி மதிப்புள்ள போதைப்பொருளை கடத்திவந்த நபரை சுங்கத்துறையினர் கைதுசெய்தனர்.

Update: 2022-10-04 02:27 GMT

மும்பை,

எத்தியோப்பியன் ஏர்லைன்ஸ் விமானத்தில் அடிஸ் அபாபாவில் இருந்து மும்பை வந்த பயணி ஒருவரை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது அவர் உள்ளாடையில் மறைத்து வைத்திருந்த 980 கிராம் கோகோயின் போதைப்பொருள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது,

இதையடுத்து அவரிடம் இருந்த போதைப்பொருளை அதிகாரிகள் பறிமுதல் செய்து அவரை கைதுசெய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருளை மதிப்பு 9.8 கோடி ரூபாய் ஆகும். கைதுசெய்யப்பட்டுள்ள நபர் தற்போது நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

 

Tags:    

மேலும் செய்திகள்